ரீல்ஸ் தீபாவளி
கதையை கேளுங்கள்
உமா ஸ்வீட்ஸ், ஜானா ஸ்வீட்ஸ், ஸ்டார் ஸ்வீட்ஸ் என தீபாவளி ஸ்வீட் பார்சல்களாக நாகலட்சுமி வீட்டிற்கு குரியர், ரெபிடோகாரர்களாக கொண்டு வந்து குவித்துக் கொண்டிருந்தனர். அவற்றின் நடுவே அவள் கணவர் நாகசாமி விழி பிதுங்க மலைத்து உட்கார்ந்திருந்தார்.
”ஏன் இப்படி முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கீங்க… உங்களுக்கு அலார்ட் பண்ணியிருக்கிற ஸ்வீட் பாக்ஸ் எல்லாம் பிரிச்சி டேஸ்ட் பார்த்து சொன்னாதானே நான் நல்ல கமெண்ட்டா சொல்லி வீடியோ எடுத்து ரீல்ஸ் போடமுடியும்… பாவம் அந்தனை ஸ்வீட் கம்பெனிகாரர்களும் சேல்ஸ் பிரமோட் ஆளுக்கு நம்ம ரீல்ஸ் ஜதான் நம்பி அனுப்பியிருக்காங்க. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. சீக்கிரம் ஆரம்பிங்க… நான் மூணு பாக்ஸை பிரிச்சிட்டு நாலாவதிலே நாக்கை வைக்கப்போறேன்” என்றார்.
மனைவியின் விரட்டலுக்கு பயந்து நாகசாமியும் ஹோம் வொர்க் செய்யும் ஒன்னாம் கிளாஸ் மாணவனாய், ‘இப்படி மாட்டிக் கொண்டோமே’ என்று அலுத்தபடி, அடுத்த பெட்டியை தன்முன் நகர்த்தி பிரித்து மேயத் தொடங்கினார்.
அந்த அடுத்த பெட்டியில் ‘வேம்பு ஸ்வீட்ஸ்’ என்று இருப்பதைப் பார்த்த வியப்புடன் “நாகு! வேம்பு ஸ்வீட்ஸ் காரனும் தீபாவளி ஸ்வீட்ஸ் அனுப்பியிருக்கான்” என்றார்.
”அட! பாருங்க அப்போ என்னமோ நம்ம ரீல்ஸை பற்றி அசாலா அவங்க பேசினாங்க… இப்போ அவங்களே அனுப்பியிருக்காங்களா… அதை நீங்க தொடாதீங்க.. நான் பார்த்துக்கிறேன்… நம்ம யாருன்னு காட்டுறேன்” என்று கடாயில் கொதிக்கும் கடலைமாவாய் நாகலட்சுமி பொங்கினாள்.
”நாகு! அவங்க பெரிய பிலைன்ஸ்காரங்க, அவங்க சமாசாரத்தில் ஏடாகூடமாக ஏதாவது பண்ணிடப் போறே” என்று நாகசாமி எச்சரித்துவிட்டு, ராமாஸ் ஸ்வீட்ஸ் இனிப்பு ஒன்றை எடுத்து சுவைத்தபடி தன் இறந்த கால நினைவுகளையும் அசைப்போட்டார்.
பணி ஓய்வு பெற்று வீட்டில் உட்கார்ந்திருந்த நாகசாமிக்கு மாலை நாலு மணி ஆனதும் நாவில் நாற்பது மில்லி அளவிற்கு உமிழ்நீர் சுரக்கும், தினமும் அந்த வேளையில் ஆபீஸ் கேண்டினில் மிளகாய் பஜ்ஜி, உருளை போண்டா, சமோசா என சாப்பிட்டுப் பழகிய நாக்கு எதையாவது திங்கக் கேட்கും.
தினமும் நாகலட்சுமி டி.வி. திரையில் அந்த வேளையில் ஏதாவது ஒரு தின்பண்ட நிகழ்ச்சியை பார்ப்பாளேயன்றி என்றுமே தான் பார்த்ததை பண்ணி தட்டில் கூட கூட எடுத்துக் கொண்டு வந்து “இந்தாங்கம்… பீட்ரூட் பஜ்ஜி இன்னிக்கு டி.வி. யிலே மாம்பாக்கம் மாமி சொல்லித் தந்தாங்க” என்று நீட்டியதில்லை.
வெக்கத்தை விட்டு ஒருநாள் கேட்டபோதும், “ஓஹோ நான் இப்போ டி.வி. யிலே பார்த்தியிருந்த்தை செஞ்சி கொண்டான்னு உங்க நாக்கு அலையதாக்கும்… ஏதோ பொழுது போகுமென்று தினம் ஒரு ரெசிபி பண்றதைப் பார்ப்பேன். பார்க்கிறதை எல்லாம் பண்ணிடா இருக்க முடியும்… நீங்க ரிடையர்மெண்ட்டுக்கு அப்புறம் ஹறாயா படுத்து தூங்குவங்க… நான் நாலு மணிக்கு கிச்சன்ல வேகணமாக்கும்” என்று ஏடாகூடமாக எகிறினாள்.
இப்படி அடக்கி ஒடுக்கப்பட்டவராய் மதிய வேளையில் செல்போனை தேய்த்துக் கொண்டிருந்தவருக்கு அதில் அடிக்கடி பார்க்கும் ஒரு வகையான இன்ஸ்டாகிராம் ரீல் கவனம் கவர்ந்தது.
”இப்போ நாம் பாக்குறது திருச்சி மலைக்கோட்டை பக்கத்து சத்திலிருக்கும் மணி மாமா மெஸ்… வாங்க உள்ளே போய் என்னென்ன ஐட்டங்களை போடறாங்கன்னு பார்ப்போம்… ஆஹா சூட கூட பூரி மசாள்… சாப்பிட்டு பார்க்கிறேன்… அட்டகாசம் நீங்கள் அடுத்தமுறை திருச்சி வந்தா இந்த மணி மாம மெஸ்ஸை மிஸ் பண்ணாதீங்க… நாளைக்கு இன்னொரு கடைக்கு போகலாம்…” சுவாரசியமாக பேசிக்கொண்டே அவர்கள் தின்பண்டங்களை உள்ளே தள்ளுவதை ஏக்கத்துடன் பார்ப்பார்.
இந்த வகையில் பார்த்த இன்ஸ்டாகிராம் ரீல் களினால் நாகசாமிக்கு உதித்திட்ட இன்ஸ்பிரேஷன் தான் ‘நாகுவின் நாக்கு’ என்ற ரீல்ஸைத் தொடங்கும் உத்வேகம் அளித்திருந்தது.
ஒருநாள் ஞாயிறு நாலு மணிக்கு ராகு கால சர்வேரசர் பூஜைக்காக மனைவியுடன் கோயிலுக்கு செல்லும்போது, வழியில் ‘காரசாரம் கபே’ என்ற சிறிய ஹோட்டல் புதிதாக திறக்கப்பட்டிருப்பது கண்ணில் பட்டது.
நப்பாசையுடன் “நாகு புதுசா ஒரு ஹோட்டல் திறந்திருக்கா போலிருக்கு… உள்ளே போய் ஏதாவது சாப்பிட்டு பார்க்கலாமா?” என்று அண்ணை கேட்க, “எனக்கும் பசிக்கிறது வாங்க” என்று அவளும் இசைந்தாள்.
”மாமா வாங்கோ… மாமி வாங்கோ, வெள்ளிக்கிழமைதான் கடையை திறந்தோம்” என்று ஹோட்டல் முதலாளியான முதியவர் பலமாக வரவேற்றார். “சூடா போட்டு சாப்பா பாருங்க?” என்று அவராகவே இரண்டு பிளேட் சாம்பார் வடைகளை கொண்டுவரச் சொல்லி உபசரித்தார்.
புளாங்கிதம் அடைந்தவளாய் நாகலட்சுமி ஸ்புனில் வடையை வெட்டி வாயில் போட்டுக் கொண்டே “ரொம்ப ஜோரா இருக்கு” என்று ரசித்து சொன்னதும், நாகசாமிக்கு ஒரு ஐடியா உதித்தது.
மனைவியை திரும்ப சொல்லச் சொல்லி அதைத் தன் செல்போனில் வீடியோவாக பதிவுக்கிக் கொண்டார். பின் உள்ளே சென்று மற்ற டிபன் ஐட்டங்கள் என்னென்ன தயாராகின்றன என்பதை எடுத்தவராய் “சேலையூர் அன்பர்களே! கந்தாஸ்திரம் போற வழியிலே இந்த ‘காரசாரம் கபே’ புதுசா திறந்திருக்காங்க… எல்லா ஐட்டமும் மொறு மொறுன்னு காரசாரமாக சூப்பரா இருக்கு” என்று நாகசாமியும் சொல்லி கல்லா முதியவரையும் படம் பிடித்துக்கொண்டார்.
அதை கன்னி முயற்சியག་ அன்றே ‘நாகுவின் நாக்கு’ என்ற நாமக்கரமிட்டு அவர் ரீல்ஸ் செய்தி்ட்ட ரீல்ஸ், ‘காரசாரம் கபே’ விற்கு பெரும் விளம்பரமாக்கி பல தீனி ரசிகர்களை நாடிவர வைத்துவிட்டது.
அதன் பின் கந்தாஸ்திரம் போகும் போதெல்லாம் இதற்கு நன்றிக் கடன்பட்டவராய் காரசார கபே முதலாளி இவர்களைத் தெருவில் பார்த்ததும் “இன்னிக்கு வெங்காய பஜ்ஜி நீங்க வந்து சாப்ட்டாதான் போகணும்” என்று கடைக்குள் இழுக்காத குறையாக உபசாரம் செய்வது தொடலாயிற்று.
இப்படி ஆரம்பமான ‘நாகுவின் நாக்கு’ ரீல்ஸ் தினந்தோறும் தீனிக்காக தினவெடுத்து திரியும் நாகசாமிக்கு நல்லதொரு உபாயமானத்துடன் நாகலட்சுமியின் நாட்டத்தையும் நாளடைவில் கவர்ந்துவிட்டிருந்தது.
”இன்னிக்கு எந்த ஹோட்டலுக்கு போறோம்? வேளச்சேரி பக்கம் ஏதாவது சின்ன கடை இருந்தா போய் ரீல்ஸ் எடுத்துண்டு, எங்க அக்கா வீட்டுக்கும் போயிட்டு வருவோம்” என்றாள்.
”இந்தப் புடவை நல்லா இருக்கா சொல்லுங்க, எல்லாரும் நான் போட்டிருக்கிற டிரஸ், நகை எல்லாவற்றையும் கவனிக்கிறா. நேத்து பல்லாவரம் பசுபதி மெஸ் லே எடுத்த ரீல்ஸை பார்த்துட்டு ‘நீ நெய் தோசை சாப்பிடும்போது போட்டிட்டிருந்த நெக்லஸ் கோல்டா இமிடேஷனா’ன்னு பானு போன் போட்டு கலாய்க்கிறா”. இப்படி நாகலட்சுமியின் ரீல்ஸ் மோகம் அதிகரித்தது.
நாளொரு ஹோட்டலும், பொழுதொரு தீனியுமாக ‘லைக்கும், கமெண்டும், ஃபர்வெர்டுமாக பெருகி “மேடம்! எங்க மேடவாக்கம் கடைக்கு எப்போ வரப்போறீங்க?” “காஞ்சிபுரம் வந்தா எங்க காமாட்சி மெஸ்ஸுக்கு வராம போயிடாதீங்க” என்ற அழைப்புகளால் தழைத்தோங்கிக் கொண்டிருந்தது.
இதன் பரிணாம வளர்ச்சியாக வரலட்சுமி நோன்பு, கிருஷ்ண ஜயந்தி என பண்டிகைகளுக்கு பட்சணங்களை தயார் செய்து விற்கும் கம்பெனிகள் தங்களது ஸ்வீட் பாக்ஸ் களின் சாம்பிள்களை அனுப்பி ‘கொஞ்சம் நல்லபடியா கமெண்ட் பண்ணி ரீல்ஸ் போடுங்க… ரீல்ஸ் மூலமா வரும் ஆர்டர்களுக்கு நல்ல கமிஷன் தர்றோம்’ என்ற ரீதியில் ‘நாகுவின் நாக்கை’ வளர்த்து விட்டிருந்தனர்.
எங்கும் அலையாமல் ‘ஒர்க் அட் ஹோம்’ பாணியில் தங்கள் ரீல்ஸ் பணியை பண்டிகைக் காலங்களில் அனுப்பப்படும் நொறுக்குத் தீனிகளால் இவர்கள் தொடர முடிந்திரந்தது.
அப்படி கிருஷ்ண ஜயந்திக்கு முறுக்கு, சீடை, அதிரசம் என்று ஒரு வார முன் அனுப்பிய ‘கோபியர் ஸ்வீt’காரர்கள், “மேடம்! நீங்க எங்க முறுக்கு சீடைக்கு போடற ரீல்ஸ் வேம்பு ஸ்வீட்ஸ் காரர்களின் பிசினஸை ஓவர்டேக் பண்ணனும்” என்று சொன்னபோதுதான், நாகலட்சுமிக்கு கப்பம் கட்டாத கட்டபொம்மன் மேல் ஜாக்சன் துறைக்கு எழுந்த சினம் உண்டாயிற்று.
மற்ற எல்லா ஸ்வீட் தயாரிப்பாளர்களும் நாகுவின் நாக்கை மதித்து ரீல்ஸ் போட தவமிருக்கும் போது, வேம்பு ஸ்வீட் காரர்கள் மட்டும் தங்கள் ஸ்வீட் சாம்பிளை விளம்பரப்படுத்த அனுப்பாமல் அவமதிப்பதா என்று நாகலட்சுமி வெகுண்டெழுந்தாலும் வெக்கத்தைவிட்டு அவளாகவே அவர்களை தொடர்பு கொண்டு பேசிப் பார்த்துவிட்டாள்.
”சார்! எங்க ரீல்ஸை பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்… நீங்களும் உங்க ஸ்வீட் சாம்பிளை எங்க விலாசத்துக்கு அனுப்பினா நல்ல பிரமோட் பண்ணுவோம்” என்றாள். கூடவே விலாசத்தையும் அவர்களுக்கு மெசேஜ் செய்திருந்தாள். அவர்களோ “ஆளாளுக்கு ரீல்ஸ் போடோம்னு இப்படி ஆயிரம் பேர் கிளம்பிடாங்க. இப்படி சீப்பான விளம்பரமெல்லாம் எங்கள் நிறுவனத்துக்கு வேண்டாம். ஏற்கனவே ஆர்டர்வந்து குவியிறது… எப்படி சப்ளை பண்றதுன்னு தவிக்கிறோம்… இதில் நீங்கள் வேறு” என்று முகத்தில் அடித்தாற்போல் அலுத்துக்கொண்டு தொடர்பை துண்டித்தது. நாகலட்சுமிக்கு பெருத்த அவமானமாகிவிட்டது.
கிருஷ்ண ஜயந்தியின்போது இப்படி தன்னை மானபங்கம் செய்தவர்கள் தீபாவளிக்கு மட்டும் எப்படி தங்கள் ஸ்வீட் சாம்பிளை அனுப்பினார்கள் என்ற சந்தேகமும் லேசான கோபமுமாக நாகலட்சுமி ‘வேம்பு ஸ்வீட் பார்சலை’ பிரித்து “ரொம்பவும்தான் பீத்திக்கிறாங்களே… அப்படி ரொம்ப டேஸ்டாவா இருக்குன்னு பார்ப்போம்” என்று கருவிக் கொண்டு கையில் முதலில் அகப்பட்ட மைசூர் பாக் கை எடுத்து கவ்வினாள்.
கடிக்க முயற்சி்த்து உடையாமல் உறுதியாய் இருந்த மைசூர் பாக்கு வை நாகசாமியிடம் காண்பித்து, “ஒரு கடப்பாரையை கொண்டாங்க! இதை உடைக்கணும், இந்த லட்சணத்திலே ஸ்வீட் பண்றவங்க அன்னிக்கு அத்தனை திமிரா பேசினாள்” என்றாள் ஆத்திரமாக.
”நாகு ஒரு மைசூர் பாக்கை வச்சு அத்தனை மலையாட்டம் இருக்கிற கம்பெனியை எடை போடாதே… பொறுமையாக மற்ற பட்சணங்களையும் சாப்பி பார்த்துட்டு சொல்லু” என்று கணவர் சமாதானம் செய்ததில் நாகலட்சுமி மற்ற ஐட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து பிரித்தாள்.
”ஐயே! மிக்ஸர் லே ஒரே எண்ணெய் சிக்கு நாத்தம்… அல்வா வை வாய் கிட்டையே கொண்டு போக முடியுமே பசையா கையிலே ஒட்டுகிறது” என்று நாகலட்சுமி அந்த வேம்பு ஸ்வீட் பாக்ஸிலிருந்த எல்லா ஐட்டங்களையும் ‘கன்றாவி’ என்று கமெண்ட் செய்தாள்.
”நாகு! எது எப்படியாவது இருந்துட்டு போகட்டும்… நமக்கென்ன வந்தது? ரொம்ப ரீல்ஸ் சூப்பரா இருக்குன்னு சொல்லி திரும்பவும் போட்டுடுவோம்” என்று நாகசாமி திரும்பவும் புத்திமதி சொன்னார்.
”நல்லா இருக்கு, நமது ரெபுடேஷன் என்னவாறது? நம்ம ரீல்ஸை நம்பி வேம்பு ஸ்வீட் டை வாங்குபவர்களுக்கு நாம் துரோகம் செய்யலாமா அது தொழில் தர்மமில்லையே… முதலே மேலே லாஃப்புட்டிலே உங்கள் அம்மா ஞாபகார்த்தமா வச்சிருக்கீங்களே அந்த பாக்கு உடைக்கிற சின்ன உரளையும் உலக்கையையும் எடுத்து மேஜை மேலே வச்சி அதன் பக்கத்திலே ‘வேம்பு ஸ்வீட்ஸ்’ பாக்ஸையும் நல்லா தெரியுமா மாதிரி வைத்து வீடியோ எடுக்க… நான் ‘இந்த உபகரணம் உங்கள் வீட்டில் இருந்தால் இவர்கள் ஸ்வீட்ஸ் வாங்குங்கள்’ன்னு இரண்டையும் காட்டி அவங்க மானத்தை வாங்குறேன்” என்று தேர்ந்த ரீல்ஸ் இயக்குநராக நாகலட்சுமி கணവരെ அவசரப்படுத்தாள்.
ஏடுடா வம்பு என்று நாகசாமி செய்யவதியாமல் தவித்தபோது நாகலட்சுமியின் செல்போன் ஒலித்தது. பெருங்களத்தூரிலிருந்து அவள் பெண் பிரியாதான் பேசினாள்.
”அம்மா! விக் ஏண்டா இருக்கேன்னு ஒரு வாரம் முன்னாடியே தீபாவளி பட்சணமெல்லாம் நேத்தே பண்ணிட்டேன்… எல்லாமே நீ சொல்லிக் கொடுத்த மாதிரிதான் செஞ்சேன்… இன்னிக்கு காலையில் ரெபிடோவிலே அனுப்பி இருக்கேன் வந்துதான் பாரு. இவருக்கு அவரோடு கம்பனியிலே தீபாவளி கிப்ட் டா வேம்பு கம்பெனியிலே கொடுத்திருக்காங்க அத்தனை ஐட்டமும் குப்பாரா இருக்கு… அந்த ஸ்வீட் பாக்ஸை காலி பண்ணிட்டு அதிலேதான் நான் பண்ணின பட்சணத்தை பேக் பண்ணி அனுப்பினேன்… டெலிவரி பண்ணியிருப்பான்… பார்த்து சொல்லு”.
பெண் பேசுவதை கேட்கும் நாகலட்சுமியின் முகத்தில் தீபாவளி லேகியமாய் ஏன் அசடு வழிகிறது என்று நாகசாமிக்கு இனிமேல்தான் புரியப்போகிறது.
இந்தக் கதையைப் பகிருங்கள்
படத்துடன் கதையின் இணைப்பைப் பகிருங்கள். குரல் பதிவையும் அதே பக்கத்தில் கேட்கலாம்.
தொடர்புடைய கதைகள்
உங்க உப்புலே டூத்பேஸ்ட் இருக்கா?
உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால்...
ஒரு ஸ்வீட் வியாதி படும் இளக்காரம்!
ஷுகர் பேஷன்ட் என்று சொல்லிக்கொள்வது இப்போதெல்லாம் ஒரு கெளரவ அந்தஸ்தாக கருதப்படுகிறது...
அமெரிக்காவும் அறுபதாம் வாய்ப்பாடும்!
உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால்...
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...