அந்தக் காலத்து தீபாவளி ஆனந்தங்கள்
கதையை கேளுங்கள்
அசை போட்டால் ஆனந்தம் தரும் அந்தக் காலத்து தீபாவளி சுவாரஸ்யங்கள் சில:
அப்போதெல்லாம் துணிமணிகள் வாங்குவது என்பதே தீவிளிக்குத் தீவிளிதான் வந்துபோகும். ஸ்கூல் யூனிஃபார்ம் நிக்கர் சட்டையைவிட்டால் வேறு கலரில் வாங்கப்படும் ஒரே அடுத்த செட் டிரஸ் தீபாவளியால்தான் உபயம் செய்யப்படும். சில வீடுகளில் இந்தத் தரித்திரப் பட்ச தீபாவளி ஆடைகளும் பள்ளிச் சீருடையாகவே தைக்கப்படும் தரித்திரத்தின் கொண்டாட்டமாக இருக்கும்.
இவ்வகை கலர் நிக்கர், ஷர்ட் துணிகளை அவரவர்கள் சாய்ஸுக்குக் கட்டாயம் விடமாட்டார்கள். ஒரே பேரிலிருந்து கிழிக்கப்படும் துணிகள் நாலைந்து அண்ணன் தம்பிகளுக்குத் தைக்கப்பட்டு ஒருதாய் மக்கள் என்பதை அடையாளம் காட்டும். அக்காவின் சீட்டி பாவாடையின் நீளம் தங்கையின் சட்டையில் காணலாம்.
அநேகமாய் பெரிசுகள் தீபாவளிப் பர்ச்சேஸ் என்பதில் பங்குபெற முற்படமாட்டார்கள், சைக்கிளில் வீடு தேடிவரும் ஜவுளி ஸ்டோர்ஸில் கடனாக வாங்கிய புடவைக்கு அம்மாக்காரி அது நைந்து கிழிந்து கொண்டிருப்பாள். அப்பாக்கள் அவர்களை மாமா ஸ்தானத்தில் தீபாவளி பட்ஜெட்டில் துண்டு விழாமல் காப்பாற்றித் தீபாவளி வரை தலைவரின் கடன் வாங்கும் திறமையைப் பொருத்துத்தான் தீபாவளி ஜவுளிகள் எடுக்கும் நாள் நிர்ணயயமாகும், முக்கால்வாசி வீடுகளில் கங்கா ஸ்நானம் முடிந்த கையோடு எண்ணெய்ப் பிசுக்கு ஓடிப்போய் ‘லைவா’கப் பார்த்து வாங்கிப் கொண்டு வந்தது என் லைஃபிலும் நடந்துள்ளது.
ஆனாலும் “இது என்னோட தீபாவளிச் சட்டை” என்று அக்கம் பக்கம், பள்ளிக்கூடமென்று பீற்றிக் கொண்ட அந்த பிராண்டட் பிராண்டட் ஷர்ட்டுகளில் ஏனோ மிஸ்ஸிங்!
வருடம் முழுவதும் ஏதோ பண்டிகைகளின் சாக்கு, வகைவகையாகப் பட்சணங்கள் அணிவகுத்தாலும் தீபாவளிப் பட்சணங்கள் என்றால் அவை கூடுதலான ஸ்வீட் தான்! இது குடும்பத் தலைவனின் கொள்முதலுக்கு உட்படாது. பண்டிகையின் பட்சணப் பகுதியின் பூர்ண உரிமை பெற்றவள் தலைவியே! இன்னின்ன பட்சணங்கள் என்று லிஸ்ட் போட்டுப் பத்து நாட்களுக்கு முன்பே மளிகைக் கடைகளுடன் நோட்டுடன் கிளம்பிவிடுவாள். வாங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை எண்ணெய்களைத் தூக்கி வர, மிஷினுக்குப் போய் அரைத்து வர, பரண்மேலிருந்து கடாய், துடுப்புக்களை இறக்கித்தரவென்று நான் படித்த பள்ளிக்கூடத்தில் தாராளமாக லீவ் வழங்குவார்கள்.
தீபாவளிக்கு முன் நாலுநாள் பிறகு அடுப்பில் ஏற்றப்படும் எண்ணெய்க் கடாய் தீபாவளியின் முன் இரவு பஜ்ஜியை டேஸ்ட் பார்க்காமல் இறங்காது. ஒரு காமன்வெல்த் போட்டிக்காக கூட எடுத்துக் கொள்ளப்படாத சிரத்தையோடு அனுசரிக்கப்படும் இந்தப் பட்சணத் தயாரிப்பில் சில மாமிகள் தன் கைப் பக்குவத்திற்கு ருசியாக வரும் சில பட்சணங்களை காமனா ஒரே வீட்டில் அக்கம் பக்க மாமிகளுக்கும் சேர்த்து செய்து கொடுப்பார்கள். தீபாவளியின் முன்பத்து, பின்புத்து என்று இந்தப் பட்சணங்களை ராத்திரி வேளைச் சாப்பாட்டிற்குப் பின் பத்தும் பத்தாதற்குத் தட்டு நிறையத் தின்ற அந்தக் கால பெரியவர்கள் அப்படி ஒன்றும் கொலஸ்ட்ரால், பி.பி. என்றெல்லாம் பீதியடைந்ததாகத் தெரியவில்லை.
ஏழெட்டுத் தாம்பாளங்களில் தீபாவளியன்று சுவாமிமுன் வைக்கப்படும் பட்சணங்கள், தெருவின் ஒவ்வொரு வீட்டிற்கும், வேலைக்காரி, பால்காரன், பள்ளிக்கூட வாத்யார், முன்சிபாலிடி சிப்பந்திகள், போஸ்ட் மேன் என்று ஒருத்தரைவிடாமல் விநியோகிக்கப்பட்டும் தீபாவளிக்குப் பின்னான நாட்களின் மாலை நேர டிபனாகத் தொடர்ந்து ஒத்துழைக்கும். இதில் அக்காக்களின் தலை தீபாவளி பட்சண சீர்கள் சேர்த்தியல்ல!
தைத் தவிர தட்டுத்தட்டாக மற்ற வீடுகளிலிருந்து திருப்பப்படும் பழிவாங்கும் பட்சணங்களும் குவியும். இவை ஒன்றையும் ராப்பிச்சை, பகல் பிச்சைக்காரர்களுக்கு உடனே தர்மம் செய்ய தர்மபத்தினிகளுக்கு மனம் வராது. போகி வரை பாதுகாக்கப்பட்டு குப்பைகளாக ஒருமனதாக அங்கீகரிக்கப்படும்!
இப்படி ஒவ்வொரு வீடுமே தீபாவளியின் போது கிராண்ட் ஸ்வீட்டுகள் செய்யப்படும் ஆனந்த பவனாக இருந்ததால் இப்போதைய கூட்டத்தை அன்றைய பலகாரக் கடைகள் அடைந்ததாகத் தெரியவில்லை.
எங்க அப்பா முப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுப்பாரு என்று சொக்கலிங்கம் தீபாவளிக்கு முப்பது நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு பர்ச்சேஸ் பற்றி சொல்லி சக நண்பர்களின் பொறாமையைக் கொளுத்திவிடுவான். அத்தனை பணம் தொட்டிக் காசைக் கரியாக்கும் திறன் அவனுடைய அப்பாவைப் போல அனைவரது அப்பாக்களுக்கும் இராது. அதேபோல் முன்கூட்டியே அவன் வீட்டில் வாங்கப்படும் பட்டாசுக்கள் காய்வதற்காக மித்தத்தில் சூரிய ஒளியில் விரிக்கப்பட்டும் அக்கம் பக்க சிறுவர்களின் வயிற்றெரிச்சலில் இன்னும் காயும்.
‘தீபாவளி கடன்’ என்பதையே சார்ந்திருந்த பட்டாசு வாங்குதலும், தீபாவளியின் முதல் நாள்தான் பல வீடுகளில் சாத்யப்படும். சொக்கலிங்க வீட்டு பட்டாசுக்களைப் போல காயும் சுகம் காணாத நமுத்துப் போனவைகளாய் அவை வெடிக்கும் என்ற கியாரண்டி இல்லாத வெத்து வேட்டுக்களாகத்தான் அத்தனையும் ‘புஸ் புஸ்’ என்பதோடு பதுங்கிவிடும்.
“டேய், மூர்த்தியோட வெடி ஒண்ணுகூட வெடிக்கலையா” என்று மானத்தை வாங்கும் இவ்வகை பட்டாசுக்கள், வானத்தில் ஏவப்படும் ராக்கெட் வகையறாக்கள் எல்லாம் தலைகாட்டவில்லை.
ரெண்டு பெருங்காயப் பை நிறைய வாங்கித் தரப்படும் பட்டாசுகளில் ஓலை வெடி என்பதே ஒத்தியான வகையில் அடங்கும். வாங்கி வந்த ஒரே ஒரு யானை வெடியை வெடிக்கும் பூர்ண உரிமை பெற்றவராக அப்பாவோ, தலை தீபாவளி மாப்பிள்ளைகளோதான் இருப்பார்கள். அந்தக்கால வெங்காய கைப்பிடி குண்டுகளாகக் களைமாக்களில் எறிகிறார்கள்!
பட்டாசுகளைப் பங்கு போடுவதில் ஆரம்பமாகும் சண்டை, பத்தும் பத்தாமல் கிடைக்கும் பங்குவில் பத்தியதும் வெடிக்காமல் நோடிக்கும் பட்டாசுகளால் இன்னும் பத்திக் கொள்ளும். வீட்டின் முன் பரவிக் கிடக்கும் பட்டாசுக் குப்பைகளின் அடர்த்திதான் அந்தந்த வீட்டின் மதிப்பை நிர்ணயம் செய்பவைகளாகக் கருதப்படும்.
பட்டாசுகளெல்லாம் தீர்ந்து போகும் பட்சத்தில், கேப் பெட்டிகள்தான் நாள் பூராவும் பொட்டுப் பொட்டென்று பட்டாசு தாகத்தைத் தீர்க்க கை கொடுக்கும்.
வெடிக்காத பட்டாசுகளைச் சேகரித்து, பிரித்து, மருந்துகளை ஒரு பட்டாசு அட்டையில் கொட்டிக் கொளுத்தும் போது பளிச்சிடும் பிரகாசத்தைக் கண்டதில் ஏற்பட்ட திருப்தியுடன் அடுத்த தீபாவளிக்கு மட்டுமே நான் பட்டாசு பற்றியே பேச வேண்டும்.
இப்போதையது போலத் தேர்தல் ஜெயிப்பு, தலைவர் வருகை, கல்யாண ரிசப்ஷன், படப்பெட்டி ஊர்வலம் என்பதற்கெல்லாம் சிவகாசிக்காரர்கள் பட்டாசு தயார் செய்ததில்லை. ஆனா தீபாவளிக்கு மட்டுமே வெடிக்கும் என்பதுதா கருதப்பட்டது அந்தக் காலம்.
டி.வி.யில் நொடிக்கொரு தர விளம்பரம், முன்பதிவு ஆர்ப்பாட்டம் என்ற எந்த வசதியையும் காணாதவர்களாய் அந்தக் காலத்து, தரமான படங்கள் நாலைந்து ஆண்டுகளாக மெனக்கெட்டு எடுக்கப்பட்டு ‘தீபாவளி ரிலீஸ்’ என்ற விசேஷ அருகதைக்காக நான்கைந்து மாதங்கள் கூடக் காத்திருக்கும். இதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் மட்டுமல்லாமல் எஸ்.எஸ்.ஆர்., ஜெமினி போன்றவர்களின் படங்களுக்கும் சரிசமமான ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கட் அவுட் அபிஷேக பாக்யங்களெல்லாம் அமையவில்லை. அவர்களின் பெயர்கள் திரையில் காட்டப்படும்போது எழும் ஓரிரு விசில் சப்தங்களும் மெய்யாலுமே சினிமாவில் காட்டப்படும் கதையம்சத்தில் அடங்கிப் போய்விடும். வலுக்கட்டாயமாக அதில் ஒரு சீனில் தீபாவளியோ தீபாவளி சம்பந்தமான பாடலோ திணிக்கப்பட்டிருக்கும்.
தீபாவளியின் மத்தியான விருந்து சாப்பாட்டை முடித்துக் கொண்டு விருவிருவென்று ஓடி ஊர்கோடி தியேட்டரில் க்யூவில் நின்று இரண்டரை அணா டிக்கெட்டை வாங்கும்போது ஏற்பட்ட குதுகலம் இன்றைய மெகா தியேட்டர்களில் கிட்டா மாயாஜாலங்களாகிவிட்டன.
அதேபோல் தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்த்து விட்டு அதை வீட்டிலும் வெளியிலும் பள்ளிக்கூடத்திலும் அடுத்த மூன்று நான்கு மாதங்கள் பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யங்களும் கனவாகிவிட்டன. சினிமாப் பாட்டு புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு அதை அடுத்ததாக எப்போது ரேடியோ சிலோனில் போடுவார்கள் என்று பார்க்கிலோ அல்லது கல்யாண வீட்டு லௌட் ஸ்பீக்கரில் எதிர்பார்ப்பதிலிருந்த சுகத்தை எத்தனை வீட்டுத் திண்ணையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு வழக்கிலும் சம்பந்தப்படாத கூட்டம் கூடுவது வழக்கம். ‘நாடோடி மன்னன்’, ‘பாசமலர்’ ஒலி சித்திரங்கள் ஒலிபரப்பப்படும். ரேடியோ, வக்கீல் வீட்டில் மட்டுமே இருந்ததால் இந்த விசித்திரம்! இப்படி ஒலி சித்திரங்களுக்கும் வசதியுடன் இனிமேல் திரைப்படங்கள் எடுக்கப்படும் ஒளிமயமான எதிர்காலம் அமையப் போவதில்லை!
இந்தக் கதையைப் பகிருங்கள்
படத்துடன் கதையின் இணைப்பைப் பகிருங்கள். குரல் பதிவையும் அதே பக்கத்தில் கேட்கலாம்.
தொடர்புடைய கதைகள்
அ"லைக்" பாயுதே!
`செல்`லில் பேசிக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை, `நெட்`டைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை...
கலிகால காது
கிருத, த்ரேதா, த்வாபர யுகங்களில் இந்த காது எனும் செவி எந்த ரிஷியின் ரகசிய உபதேச மந்திரங்களை ஒட்டுகேட்டுத் தொலைத்து சாபம் வாங்கிக் கட்டிக் கொண்டதோ...
ஒரு அதிரடி அட்டாக் !
ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி சாதுசங்கரனுக்கு இப்படி ஒரு உத்தரவு வந்து தொலைந்திருந்தது...
கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன...