பட்டி

உயிர்கொண்டு போம்பொழுது

உயிர்கொண்டு போம்பொழுது

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் 7 நிமிடம் வாசிப்பு நகைச்சுவை

(லேடீÞ Þபெஷல் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை)

“உங்ககிட்ட அநாவசியமா வெளியிலே போகாதீங்கன்னு நானும் அடிச்சுண்டேதான் இருந்தேன்... நீங்க கேட்கலே... இப்போ சந்தேகப்படும்படியா உடம்புக்கு வந்திருக்கு... ரிசல்ட் பாஸிடிவ் னு வந்தா நான் ஒண்டிகட்டியா என்ன செய்வேன்... யாரு உதவிக்கு வருவா” சரÞவதி கவலையுடன் அங்கலாய்த்தாள். ஆனால், எழுபதை தாண்டிய கணவரான கணபதி சுப்ரமணியனுக்கோ மனதில் வேறேதோ கவலைகளாக எழுந்துக் கொண்டிருந்தன.

“சரசு! ஒருவேளை பாஸிடிவ் னு வந்தா இந்த நர்சிங் ஹோம் வேண்டாம்... லட்ச லட்சமா பிடுங்கிடறான்னு கேள்விப்பட்டேன். மெடிகல் சென்டர்லே அத்தனை காசு ஆறதில்லையாம்... அங்கேயே போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறேன்... எப்படியும் பதினைந்து நாளாகும். நம்ப ஓ.எம்.ஆர். ஃபிளாட்லே குடியிருக்கிறவன் பாத்ரூம் ரிபேர் பண்ணனும்னு சொன்னான். இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ளே பண்ணி தரலைன்னா அவனே யாரையாவது வச்சிண்டு செஞ்சிகிறதா சொன்னான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கும் ரிபேர் செலவை இழுத்து விட்டுடக் கூடாது... மே 2 பேங்க்லே ஒரு டெபாஸிட் மெச்சூர் ஆறது அதை அங்கேர்ந்து எடுத்து வேற நல்ல பிராபிஃட்டோட இன்வெÞட் பண்ணனும்... நம்ப ராமாபுரம் ஃபிளாட்டை விக்கலாம்னு ‘ஆட்’ போட்டிருக்கிறேன்... இன்னிக்கோ நாளைக்கோ எல்லாரும் மெஸேஜ் பண்ண ஆரம்பிச்சுடுவா... இத்தனையையும் நான் ஆÞபத்திரியலே அட்மிட் ஆயிருக்கிற சமயமா எப்படி கவனிக்கப் போறேனோ தெரியலே.”

இப்படி தன் கணவன் அடுக்கடுக்காக கவலைப்பட்ட சங்கதிகள் அனைத்தும் காசு பணம் சம்பந்தமாகவே இருந்ததில் சரÞவதிக்கு அவர்மேல் கோபமும் ஆத்திரமுமாக வந்தது. “கொஞ்சம் புலம்பறதை நிறுத்துங்கோ... உங்க உடம்புக்கு ஒண்ணு மில்லாமே பொழைச்சு வரணுமேன்னு நான் கவலைபட்டுண்டு ஆயிரம் சாமியை வேண்டிண்டு உட்கார்ந்திருக்கேன். உங்களுக்கு உங்க உடம்பு பத்தி கவலையே இல்லையா.. இப்போவும் பணம்... பணம் னு அடிச்சிக்கணுமா” என்று கோபப்படத்தான் வேண்டியிருந்தது.

கணபதி சுப்ரமணியன் அரசாங்க உத்யோகத்தில் இருந்தபோதே தன் சம்பளத்தைவிட கிம்பளமான லஞ்சப் பணத்தில் இரண்டு வீடு வாங்கி மகன் பரத்தை வெளிநாட்டில் படிக்க வைத்துவிட்டார். பரத் அங்கேயே டாலர்களாக கொழிக்கும் சம்பளத்தில் வேலையை தேடிக்கொண்டு அவனோடு வேலை செய்யும் பணம் காய்க்கும் தன் பத்தினியையும் தேடிக் கொண்டான்.

“ரெண்டு பேரு சம்பாதிச்சு தாம் தூம்னு செலவு செய்யாதீங்க... இங்கே எங்கிட்டே அனுப்புங்க... நல்ல இன்வெÞட்மெண்ட்டா பண்ணி வைக்கறேன்” என்று மருமகளை அவளது வருமானத்திற்காக மனப்பூர்வமாக வரவேற்று ஏற்றுக்கொண்டார்.

அப்பாவிற்கு வயதாகிறது என்று இந்தியாவிற்கு திரும்பிவிட ஆசைப்பட்டவனிடம் அடம்பிடித்து அங்கேயே இருக்கும்படி செய்யும் அளவிற்கு அவர் வயதோடு பணத்தாசையும் வளர்ந்தது.

வாழ்க்கை முழுவதுமே அத்தனை பணத்தை எப்படி காப்பது, எப்படி பெருக்குவது என்றே கணபதி சுப்ரமணியனின் சிந்தனை வீணானது.

கோயில் குளம் என்று போவதில் நம்பிக்கையில்லை. சரÞவதி ஆசைப்பட்டு ஓரிரு யாத்திரிகைகளுக்கு போக கேட்டபோது ஏதோ சாக்கு சொல்லி நிராகரித்து விட்டார்.

நியூÞ பேப்பர், டிவி நியூÞகளில் பங்கு சந்தை ஷேர் இத்யாதிகளை தவிர வேறு செய்திகளை அவர் கண் பார்த்ததில்லை.

“இப்படி பணம் பணம்னு எல்லாத்துக்கும் அடிச்சுக்கிறேளே, வயசான காலத்திலே நல்ல கதிக்கு நாலு தானம், தர்மம் செய்ய வேண்டாமா” என்று சரÞவதி கேட்பதுண்டு.

“ஏண்டி நாலு காசு சேர்கறதுன்னா சாமான்யமா? எதுக்கு சேர்கறேன்... நாளைக்கு நம்ப பிள்ளை, பேரன் பேத்தின்னு வம்சமெல்லாம் சௌகர்யமா இருக்கணும்னுதானே... இன்னிக்கு இருக்குன்றதுக்காக கண்டபடி செலவு செய்ய சொல்றயா?” என்று ஒரேயடியாக மனைவியை அடக்கி விடுவார்.

சென்ற வருடம் உலகத்திற்கே நல்உபதேசம் செய்ய வந்ததுபோல் பரவிய கொரோனாவினாலும் இவரை திருத்த இயலவில்லை.

“தனியா ரெண்டு பேரும் தவிக்கிறேங்களே... நான் போன வருஷமே இந்தியா வரேன்னு சொல்லியும் நீங்க கேட்கலே... தினம் தினம் நியூÞ கேட்கும்போது வயத்தை கலக்குது. இப்போ இங்கேர்ந்து கிளம்பி வரமுடியாத நிலைமை... என்ன பண்றதுன்னு கவலையா இருக்கு.”

இப்படி பரத் கவலைப்பட்டானேயன்றி கணபதிக்கு கடுகளவும் பயமில்லாமலிருந்தது. ஊர் உலகமே பணம் காசையும் மீறி மனிதநேயத்தோடு ஏழை எளியவர்களுக்கு தொண்டு செய்யும் மனப்பக்குவத்தை இந்த கொடிய நோயின் பயனாய் பெற்றிருக்க, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பதினைந்து நாள் மருத்துவத்துக்கு செலவு செய்ய முடியாத ஏழ்மையில் உதவி கேட்டு வந்த சமையல் மாமிக்கு பணத்தை கடனாக கூட கொடுக்க கணபதிக்கு மனம் வரவில்லை.

அதையும் மீறிய கொடுமையாக அவள் நோயினால் வராத நாட்களின் சம்பளத்தையும் பிடித்துக் கொண்டு கொடுத்த கணவரின் அற்ப செயலும் சரÞவதியை மிகவும் வருத்தமுற நேர்ந்தது.

கொரோனா முதல் அலை ஓயும்வரை சரÞவதியின் மனம் இதை நினைத்து ஆறவில்லை. இப்படி ஒரு ஏழைக்கு இரங்க மறுக்கும் கணவனுக்கு தண்டனையாக அந்த வியாதி வந்துவிடுமோ என்றும், அதற்கு பிராயசித்தமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் உருகிக் கொண்டிருந்தாள்.

பெற்றோர்களை பார்க்க பரத்தும் அந்த நவம்பர் மாதத்தில் வந்திருக்க, சரÞவதி தன் உள்ளகிடக்கை பிள்ளையிடம் கொட்டினாள்.

“இன்னிக்கு இருக்கிறவா நாளைக்கு நிரந்தரமில்லேன்னு உலகம் பூரா பெரிய பெரிய பணக்காராளை எல்லாம் இந்த நோய் கொண்டு போயிண்டிருந்ததைப் பார்த்து தினம் தினம் பயந்தேன்... அப்பவும் உன் அப்பாவுக்கு புத்தி வரலே... பாவம் இந்த சமையல்கார மாமியோட சம்பளத்தை இப்படி பிடிச்சுண்டு தராறே அவா மனசு கஷ்டப்பட்டு அதனாலே ஏதோவது பாதிப்பு வந்துடுமோன்னு பயந்தேன்... அப்பாவுக்கு தெரியாத அந்த மாமிக்கு என்கிட்ட இருந்த பணத்தைக் கொடுத்ததும்தான் கொஞ்சம் நிம்மதி ஆச்சி.. இங்கே வீடு, அங்கே வீடு... இதுலே டெப்பாசிட், அதுலே பணம்னு அப்பாவோட பண பைத்தியம் இந்த கொரோனா கொடுமையிலும் அடங்கலே.

எனக்கு இதுக்கு பரிகாரமா ஏதாவது செஞ்சே ஆகணும்னு தோன்றது. உங்க அப்பா ஒத்துக்கவே மாட்டார்... ‘ஆண்டவன் நமக்கு கொடுக்கறதெல்லாம் நமக்கு மட்டுமில்லே... நாமெல்லாம் அதுக்கெல்லாம் ஒரு கார்டியன் மாதிரிதான்... இருக்கப்பட்டவாகிட்டே இருக்கிற பணம் காசெல்லாம் இல்லாதவாளுக்கு கொடுக்கறத்துக்குத்தான்னு ஸ்ரீமஹாபெரியவா சொல்லியிருக்கா.

எனக்கோ அப்பாவுக்கோ ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா இந்நேரம் உன்கூட பேச இருந்திருக்க மாட்டோம்... பத்து பதினைஞ்சு லட்சம்னு மெடிகல் செலவோட எங்க உயிர் போயிருக்கும். இப்போ பொழைச்சி கிடக்கோம்னா அப்படி பெரிய செலவை வைக்காம சாமி நம்மை காப்பாத்தி இருக்கார்னு புரிஞ்சிக்கணும்... அது புரிஞ்சா நாலு பேருக்கு உதவணும்னு தோணும். இப்படி நம்பளை அண்டியிருக்கிற நாலு பேருக்கு உதவி செஞ்சி அவா மனசு குளிர்ந்தா அதுவே நம்மை காப்பாத்தற கவசமாக சமயத்திலே கைக் கொடுக்கும்.

அதனாலே அப்பாவுக்கு தெரியாமே ஒரு பெரிய தொகையை ஏதாவது அனாதை ஆÞரமத்துக்கோ, தர்ம Þபானத்துக்கோ கொடுக்கணும்னு ஆசைப்படறேன்.... அப்பத்தான் என் மனசு நிம்மதியாகும். நீ எப்படியாவது அந்த நல்ல காரியத்தை உன் பணத்தை வைச்சுண்டு செஞ்சிட்டு போயிடு... அதுவே போதும்.”

சரÞவதி மிக உருக்கமாக பரத்திடம் முறையிட்டதில் அவனும் தன் இளகிய மனதின் உந்துததால் அப்படியே சில லட்சங்களை மனப்பூர்வமாக ஒரு தர்ம கைங்கர்யத்திற்கு செலவிட்டு சென்றான். அதன் விபரங்களோடு அந்த பெருந்தொகைக்கான ரசீதை தாயிடம் தந்து அவளுக்கு ஒரு ஆறுதல் தந்துவிட்டு திரும்பிச் சென்றான்.

அவன் திரும்பிச் சென்ற மூன்று மாதங்களில் திரும்பவும் அந்த கொடிய நோயின் அலை பெருகி வந்துவிட்டது. இந்த முறை கணபதி சுப்ரமணியனுக்கு பாடம் கற்பிக்க கொரோனா முயற்சி செய்ததுபோல் முககவசம் போடாமல் அங்கே இங்கே என்று சுற்றிக் கொண்டிருந்தவரை பிடித்துக் கொண்டிருந்தது.

பாஸிட்டிவ்வா, நெகடிவ்வா என்பதை அறிய உட்கார்ந்திருந்தவர்களை அதற்கு அவசியமில்லாமல் செய்வதுபோல கணபதியின் சுவாசம் சற்று கடுமையானது. எதையும் ஒரு பொருட்டாக மதிக்காதவரான கணபதி மூச்சுவிட மிக சிரமப்பட தொடங்கினார். அந்த நர்ஸிங் ஹோம் பெஞ்சில் அவர் அப்படியும் இப்படியுமாக மூச்சுவிட முடியாமல் புரண்டதைப் பார்த்து சரÞவதிக்கு கலக்கம் ஏற்பட்டது.

“யாராவது வாங்களேன்... இப்படி அவÞதைப் படறாரே” என்று நர்ஸிங் ஹோமின் செவிலியர்களை ஓடிப்போய் கூப்பிட்டுக் கொண்டு வந்தாள். பரபரவென்று அவர்கள் இயங்க உடனே அவரை ஐ.சி.யூ. விற்கு கொண்டு சென்றுவிட்டனர். உள்ளே சரÞவதியை விட மறுத்ததால், கையை பிசைந்தபடி செய்வதறியாமல் சரÞவதி யாரை கூப்பிடலாமென்று தவித்தாள். உடனே சமையல் மாமிக்கு போன் செய்தாள். அடுத்த அரைமணியில் மாமி தன் கணவருடன் ஆட்டோவில் வந்து இறங்கினாள். அவள் கையில் ஒரு பிளாÞகில் காபி இருந்தது.

“என்ன மாமி எங்களை முன்னாலேயே கூப்பிட்டிருக்க வேண்டாமா” என்று சமையல் மாமி ஆறுதலுடன் ஒரு கப் காபியை ஊற்றி சரÞவதியிடம் கொடுத்தாள். மன பதைபதைக்கு அந்த காபி ஒத்தடமாக இருந்தது. அந்த ஏழை தம்பதியினரும் வருடிக் கொடுக்கும் வார்த்தைகளால் சரÞவதியிடம் இதமாக பேசினார்கள். “மாமி நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க... போன வருஷம் வந்தபோதுதான் ட்ரீட்மெண்ட்டெல்லாம் சிக்கலாயிருந்தது. இப்போ விடுவிடுன்னு பண்ண டாக்டரெல்லாம் கத்துண்டுட்டா... நீங்க வேணா பாருங்க மாமா சட்னு குணமாயிடுவார்... அதுவரைக்கும் எங்காத்துகாரி உங்களோடே ஒத்தாiயாக இருப்பா கவலைப்படாதீங்க” என்று சமையல் மாமியின் கணவரும் ஆறுதலாக பேசினார்.

சரÞவதிக்கு கொஞ்சம் சமாதானமானது. ஆனால் உள்ளே கணபதியின் நிலை மிக மோசமாகியிருப்பது தெரிந்தது. டாக்டர் ஒருவர் சரÞவதியை நோக்கி விரைவாக வந்தார்.

“மேடம்! கொஞ்சம் பயப்படாத நான் சொல்றதை கேளுங்க... அவருக்கு ரொம்பவுமே மூச்சு திணறலா போச்சி... எங்ககிட்டே தினமும் கொரோனா கேÞகள் நிறைய வர்றதாலே ஆக்ஸிஜன் ரொம்ப தட்டுப்பாடா போச்சி... இருந்த ஒரு சிலிண்டரை இப்பத்தான் ஒரு பேஷண்ட்டுக்கு அலாட் பண்ணினோம்... பக்கத்து நர்சிங் ஹோமிற்கு தகவல் கொடுத்திருக்கோம்... இப்போ வந்துடும்னு நினைக்கறோம். அப்படி இல்லைன்னா ரொம்ப சீரியஸாக போயிடும். நீங்க அவரை வேற கிளின்க்குக்கு கொண்டு போறதா இருக்கும்... தயாராக இருங்க” என்று அந்த டாக்டர் சரÞவதிக்கு பேரிடியாக செய்தி சொல்லிவிட்டு நகர்ந்தார்.

சரÞவதிக்கு அழுகை வெடித்தது. “ஆண்டவா இப்படி சோதனை செய்றயே... எல்லாமும் இருந்து இப்போ ஒண்ணுமில்லாத நிர்கதியா நிக்கறனே. பிள்ளையும் எங்கேயோ இருக்கான். இப்படி இவருக்கு ஆயிடுச்சே.... குலதெய்வமே காப்பாத்து....” என்று வாய்விட்டே கதறியபடி செய்வதறியாது உட்கார்ந்து விட்டாள். அரை மணிநேரம் நரக வேதனையாக கடந்தது. திரும்பவும் அதே டாக்டர் விரைந்து வர, சரÞவதி நம்பிக்கை இழந்தே விட்டாள்.

“மேடம்... கவலைப்படாதீங்க.... சிலிண்டர் கிடைச்சிடுச்சு. இப்போ நிலைமை பெட்டரா இருக்கு” என்று அதே டாக்டர் உள்ளேயிருந்து ஓடிவந்து தகவல் தந்தார். சரÞவதிக்கு நிம்மதி தந்தவர் தொடர்ந்தார், “ரியலி அவர் ரொம்ப லக்கிதான். இருந்த ஒரு சிலிண்டரை இன்னொரு பேஷண்ட்டுகுக அலாட் பண்ணினதா சொன்னேனே... நான் திரும்பி போறதுக்குள்ளே அந்த பேஷண்ட்டுக்கு அது அவசியப்படாத நிலையா மாறிபோச்சி... அவர் காலமாயிட்டாரு. அதனாலே அந்த சிலிண்டரை உங்க ஹÞபண்ட்டுக்கு யூÞ பண்ண முடிஞ்சது” என்று கூடுதலான வியப்பான சங்கதியையும் சரÞவதியின் வயிற்றில் பால் வார்ப்பதாக கூறிவிட்டு சென்றார்.

சரÞவதியின் மனம் தெய்வத்திற்கு நன்றி சொன்னது. அடுத்த நிமிடங்கள் மௌனமாக நகர்ந்தன.

“எல்லாரும் விலகிப் போங்க... விலகிக் போங்க” என்று மருத்துவமனை சிப்பந்திகள் விரட்டாத குறையாக எல்லோரையும் தூரமாய் போகும்படி அவசரப்படுத்தினார்கள்.

விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்த சரÞவதிக்கு அந்த காட்சி மனதை பிசைந்தது. உடம்பை முற்றிலும் கவசத்தால் மூடிய சிப்பந்திகள் ஒரு இறந்த உடலை உள்ளேயிருந்து எடுத்துக் கொண்டு வந்து வாசலில் நின்ற அந்த வேனில் ஏற்றினார்கள். ஹாÞபத்திரி என்று வந்துவிட்டால் எத்தனை சோகங்களை பார்க்க வேண்டியுள்ளது... என்று சரÞவதி வேதனைப்பட்டுக் கொண்டிருக்க, சமையல் மாமியின் கணவர் யாரிடமோ அதைப் பற்றின விபரங்களை சேகரித்துக் கொண்டு வந்தவராய்

அதை சொன்னார்.

“மாமி! இப்போ எடுத்துண்டு போறாங்களே... அந்த பேஷண்ட்டுக்காகத்தான் ஆக்ஸிஜன் வைச்சிருந்தாங்களாம். டாக்டர் உங்ககிட்ட வந்து இதைப்பத்தி சொல்லிட்டு இருந்தபோதே அந்த உசுரு போயிடுச்சாம்... அதனாலேதான் மாமாவுக்கு அந்த சிலிண்டர் கிடைச்சி ஆபத்தான நிலையிலிருந்து காப்பாத்த முடிஞ்சிருக்கு” என்று அவர் சொன்னபோது, சரÞவதியின் மனம் நெகிழ்ந்தது. கணவரின் உயிருக்காக உயிரை பிரிந்த அந்த ஆத்மாவைப் பற்றி சரÞவதி அறிய ஆவலுற்றாள்.

“ச்ச்... சோ! அந்த பேஷண்ட் யாராம்?” என்று வருத்தத்தோடு மாமி கேட்டாள்.

“யாரோ... சொந்த பந்தமில்லாத ஆனாதையாம். அபிராமி அனாதை ஆÞரமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்திருக்காங்க... இப்போ அந்த ஆÞரம வேன்லதான் ‘பாடி’யை எடுத்துட்டு போறாங்க” என்று அவர் சொன்னதும், சரÞவதிக்கு அந்த தகவல் சற்றே அதிர்ச்சி தந்தது.

“என்ன ஆÞரமம் னு பேரு சொன்னீங்க?” என்று தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ள திரும்பவும் கேட்டாள்.

“அதான் வேன்லே எழுதியிருந்ததே ‘அபிராமி அனாதை ஆÞரமம்’னு” என்று அவர் சொன்னபோது சரÞவதிக்கு மெய்சிலிர்த்தது. எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று யோசித்தபடி கேட்டவளுக்கு பரத் அந்த பெரும் தொகையை அளித்த அதே ஆÞரமம்தான் இது என்று நினைவிற்கு வந்ததில் வியப்பு மேலிட்டது.

அனாதையாக இருந்த அந்த ஆÞரமத்தின் ஒரு ஆத்மா அதற்கு நன்றி கடனாக தன் கணவருக்கு உயிர் பிச்சை கொடுத்திருப்பதுபோல் சரÞவதிக்கு உணர முடிந்தது. தர்மத்தின் வலிமை எப்படி எல்லாம் காப்பாற்றும் என்பது கண்கூடாக தெரிந்தது.

அந்த அனாதையின் ‘உயிர் கொண்டு போம்பொழுது’ அழ உற்றாராகியது போல, சரÞவதியின் கண்களில் நீர் சுரந்தது. அதே கண்ணீர் பிழைத்தெழப்போகும் கணவரின் குண கசடுகளையும் அகற்ற வேண்டுமென சரÞவதி மனமுருகினாள்.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை மகிழ்வியுங்கள்!

தொடர்புடைய கதைகள்

உங்க உப்புலே டூத்பேஸ்ட் இருக்கா?
நகைச்சுவை கதை

உங்க உப்புலே டூத்பேஸ்ட் இருக்கா?

உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால்...

3 நிமிடம்
அ"லைக்" பாயுதே!
நகைச்சுவை கதை

அ"லைக்" பாயுதே!

`செல்`லில் பேசிக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை, `நெட்`டைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் சிரமமில்லை...

2 நிமிடம்
அமெரிக்காவும் அறுபதாம் வாய்ப்பாடும்!
நகைச்சுவை கதை

அமெரிக்காவும் அறுபதாம் வாய்ப்பாடும்!

உங்களிடம் முப்பத்திரண்டு பல்லும் கொட்டாமல் இருக்கிறதா உங்களுக்கு அதை தினமும் துலக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படி ஒரு பழக்கம் இருந்தால்...

3 நிமிடம்

கருத்துகள்

உங்கள் கருத்து அங்கீகரிக்கப்பட்ட பிறகு காண்பிக்கப்படும்

கருத்துகள் ஏற்றப்படுகின்றன...

கூடை

மொத்தம்

₹0