பட்டி

நரகாசுரனுக்கு நன்றி சொல்வோம்!

எழுதியவர்: அகிலா கார்த்திகேயன் சமூகம்
Story Image
தீபாவளி அதிகாலையில் கங்காஸ்நானம் செய்துக்கொண்டிருந்த கங்காரப்பா குழாயில் தண்ணீர் வராததால் “நீரு பருதில்லா...

Share this story:

தீபாவளி அதிகாலையில் கங்காஸ்நானம் செய்துக்கொண்டிருந்த கங்காரப்பா குழாயில் தண்ணீர் வராததால் “நீரு பருதில்லா… நீரு பருதில்லா” என்று கன்னடத்தில் கத்தினார். அவருடைய கத்தலை யார் காதிலும் விழவிடாமல் அவருடைய மாப்பிள்ளை மகேஷ் கொளுத்திப் போட்ட ஆயிரம் வாலா படபடவென்று வெடித்துக் கொண்டிருந்தது.

தன் அபயகுரல் யார் செவிக்கும் எட்டாததை அறிந்தவராய், கங்காரப்பா குளியலறையிலிருந்து வெளியே வந்து அருகிலிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து தன் முகம், தலையென சேராய் அப்பியிருந்த சீயக்காயை வழித்து எடுத்து எரியும் விழியால் மனைவியை தேடினார். மனைவி பங்காரம்மாவை பக்கத்தில் காணாதவராய் “நீரு பருதில்லா நீரு பருதில்லா ஏய் பங்காரு நீரு பருதில்லா” என்று கோர்ட் பணியாளராக திரும்பவும் முன்று முறை பெரும் சவாலாய் கூவினார். கூவலைக் கேட்டு சமையலையிலிருந்து ஓடி வந்த பங்காரம்மா அந்தகால கரிபிடித்த வெந்நீர் அண்டாவாக கரெலென்று தொப்பையும் தொந்தியுமான உடம்பெங்கும் நல்ல செக்கு எண்ணெய்யை பூசியபடி சீயக்காய் வழுக்கை தலையுமாக உட்கார்ந்திருந்த கணவரைப் பார்த்ததும் ‘பக்’கென்று சிரித்துவிட்டாள்.

“ஏய்! நகு பேடா” என்று சிரிக்காதே என்று கன்னட அதட்டல் போட்டுவிட்டு குளிக்கும்போது பாதியில் தண்ணீர் நின்றுவிட்டதை கூறி வாட்ச்மேனிடம் சொல்லச் சொன்னார். அவளும் ஓடிப்போய் சொல்லிவிட்டு வந்தாள்.

இடையே ஹாலில் வைத்திருந்த கங்காரப்பாவின் செல்போன் ஒலிக்க, அந்த வீடியோ காலை எடுத்தவள் எதிர்முனையில் குமாரப்பா கூப்பிடுவதை பார்த்துவிட்டு கணவர் பிறகு பேசுவார் என்று சொல்லி துண்டிக்காமல், துடிப்போடு ஓடி போய் கணவரின் பிசுபிசு கையில் திணித்துவிட்டு வந்துவிட்டாள்.

வீடியோ காலில் “கங்காஸ்நானம் ஆயித்தா?” என்று கேட்ட குமாரப்பா எசகுபிசகான கோலத்தில் அமர்ந்திருந்த கங்காரப்பாவைப் பார்த்துவிட்டு ஒரு பெரிய நகைப்புடன் “தீபாவளியன்னிக்கு நரகாசுரனையே தரிசனம் செஞ்சதுபோல இருக்கு” என்று கன்னடத்தில் கூறி சிரித்துவிட்டு அந்த தாறுமாறான கங்காரப்பாவின் உருவத்தை தன் போனில் உருவிக் கொண்டான்.

கங்காரப்பா வெட்கமும் கோபமுமாக போனை துண்டித்துவிட்டு “ஏய் உனக்கு அறிவிருக்கா… இப்படி நான் அலங்கோலமா உட்கார்ந்திருக்கும் போதா வீடியோ காலை கொண்டுவந்து தருவே… அந்த குமாரப்பா ரொம்பவும் குறும்புக்காரன்… ஏடாகூடமா ஏதாவது செஞ்சு மானத்தை வாங்கப் போறான்” என்று மனைவியை நொந்துக் கொண்டார்.

அதற்குள் “ஐயா டேங்கிலே ஃபுல்லா தண்ணியிருக்கு… யாரோ வால்வை மூடியிருக்காங்க… நான் போய்த்தான் திறந்துவிட்டுட்டு வந்தேன்… இப்போ தண்ணி வரும் போய் குளிங்க” என்று சொல்லியபடி வந்த வாட்ச்மேனும் தன் எஜமானரின் பேஜாரான கோலத்தை கண்டு வாய்விட்டு சிரித்து விட்டான்.

கங்காரப்பா கடுப்பாகி “உனக்கு தெரியாம யாருய்யா வால்வை மூடியிருப்பாங்க… ஒழுங்கா வாட்ச்மேன் உத்யோகம் பார்க்காம தூங்கி வழிஞ்சிருப்பே…” என்று அவனையும் கோபித்துக் கொண்டு தன் கங்கா ஸ்நானத்தை கண்ட்டினியூ செய்ய உள்ளே சென்றார்.

“நேத்து ராத்திரி கட்சி ஆளுங்க மொட்டை மாடியிலே பட்டாசு, பாட்டில் னு கும்மாளம் போட்டானுங்க. அதுலே எவனாவது போதையிலே வால்வை மூடிட்டு போயிருப்பான்… இவரு என்னவோ என்னை கோவிச்சிக்கிறாரு” என்று முணகியபடி அங்கிருந்து அகன்றான். கங்காரப்பா ‘கன்னட சேவகன்’ என்ற ஒரு லெட்டர்பேட் அமைப்புக்கு தலைவராக கன்னட மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று ஒரு கும்பலை கூட்டிக் கொண்டு அரசியல் பிரதான கட்சிகள் செய்யும் போராட்டம், ஆர்பாட்டம் இவைகளுக்கு ஒத்தாசை செய்துக் கொண்டிருந்தார். பெரிய கட்சிகளிடமிருந்து பெறும் நிதியில் ஓரளவு வசதியோடு வாழ்க்கையை ஒப்பேற்றிக் கொண்டிருந்தார். சமீபத்தில் காவிரி நீர் தரமாட்டோம் என்ற போராட்டத்தில் தொண்டாற்றியதற்கு கணிசமான சன்மானம் கிடைத்திருந்தது. சென்னை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த அவர் மகள் நித்யா அங்கேயே தஞ்சாவூர் பையனான மகேஷை காதலித்தாள்.

மகேஷ், திருமணம் சென்னையில்தான் நடக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டான். தன் மகளின் திருமணத்தை தன் சொந்த ஊரில் தடபுடலாக நடத்தி அதில் ஒரு அரசியல் ஆதாயம் தேடலாமென்று எண்ணியிருந்த கங்காரப்பா அரை மனதுடன்தான் அதற்கு ஒப்புக்கொண்டார். அந்த சென்னை கல்யாண மண்டபத்திற்கு லாரிகளில் தண்ணீர் வருவதைப் பார்த்துவிட்டு காவிரி கொட்டு கொட்டுனு கொட்ற நம்ம ஊரை விட்டுட்டு இங்கே வந்து திருமணம் செய்கிறோமே என்று மனைவியிடம் நொந்து கொண்டார்.

இப்படி காவிரி நீர் கர்நாடக கல்யாண மண்டப கழிவறைகளிலும் கூட தாராளமாக வீணாவதை அறிந்தவனாய்தான் மகேஷ் அப்படி வீணடிப்பதில் தானும் பங்கு கொண்டது போலாகி விடக்கூடாது என்ற மனஉறுத்தலோடுதான் சென்னையில் கல்யாணம் என்ற கண்டிஷன் போட்டிருந்தான்.

தன் மகளின் தலை தீபாவளியையாவது சொந்த ஊரில் கொண்டாட வேண்டுமென கங்காரப்பா ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். பாவம் இப்படி கங்காஸ்நானத்தின்போதே யாரோ சதி செய்து வால்வை மூடி, இவர் மூடை கெடுத்திருந்தனர்.

இருந்தாலும் குழாயில் கொட்டிய காவிரியை கங்கையாகவே பாவித்து ஆனந்தமாக குளியல் போட்டு, புத்தாடை உடுத்தி, ஒரு தேக்கரண்டி லேகியத்தை விழுங்கி நெற்றியில் சந்தன குங்கும பொட்டுடன் தன் மகளின் தலைதீபாவளி குதூகலத்திற்கு ஆயத்தமானார்.

“ஏய் பங்காரு நித்யாவையும் மாப்பிள்ளையையும் கூப்பிடு… கங்காஸ்நானம் பண்ணச் சொல்லு” என்று எதிரே இருந்த ஏகப்பட்ட தின்பண்டங்களில் எதை வாயில் போடலாமென்று ஜொல்லு கொட்டிக் கொண்டிருந்தபோது, அதை எதையும் தொடவிடாமல் அவருடைய செல்போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஏனோ போன் செய்த எல்லோரும் ஏகப்பட்ட எள்ளி நகையாடலுடன் ‘நரகாசுரா! கங்காஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்டு நக்கல் செய்தனர். எல்லோரும் இந்த ரீதியில் சதாய்க்கவே ஒன்றும் புரியாமல் கங்காரப்பா கடுப்பாகி உட்கார்ந்திருந்தார்.

“மாமா யாரோ… ஃபேஸ்புக்கிலே இப்படி போட்டு உங்களை கிண்டல் பண்ணியிருக்கான்” என்றபடி மகேஷ் அந்த முகநூல் பதிவை மாமனாரிடம் காட்டினான்.

‘நம்ம ஊரு நரகாசுரன்’ என்ற தலைப்பிட்டு கங்காரப்பாவின் அன்றைய காலை கன்றாவி போட்டோவை போட்டு குமாரப்பாதான் இந்த குறும்பை செய்திருந்தான்.

‘இப்படி மானத்தை வாங்கிட்டானே படுபாவி’ என்று குமாரப்பாவை சபித்தபடி செல்போனை சுட்ச் ஆஃப் செய்துவிட்டு இடிந்துபோய் உட்கார்ந்திருந்த கங்காரப்பாவிடம் புத்தாடை உடுத்திய பெண்ணும் மாப்பிள்ளையும் வந்து “மாமா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று காலில் விழுந்தனர்.

“நல்லா இருங்க” என்று ஆசி கூறிய கங்காரப்பாவின் முகம் சோகமாக காணப்பட “அப்பா உடம்பு ஏதாவது சரியில்லையா” என்று பெண் கவலையுடன் கேட்டாள்.

“இந்த குமாரப்பா இப்படி ஒரு விஷமம் பண்ணி வைச்சிருக்கானே… எத்தனை பேர் பார்த்தாங்களோ… ஒரே வெட்கமாக இருக்கு… போனை எடுக்கவே பயமா இருக்கு. பாவி என் தீபாவளி சந்தோஷத்தை எல்லாம் கெடுத்து தொலைச்சுட்டான்” என்று கங்காரப்பா நொந்து கொண்டபோது “மாமா கவலைப்படாதீங்க… அதை விட்டுத் தள்ளுங்க. உங்க செல்போனை கொஞ்சம் அன்லாக் பண்ணிட்டு கொடுங்க சொல்றேன்” என்று அவரிடமிருந்து போனை வாங்கி “மாமா கொஞ்சும் சிரிங்க” என்று அவரை படம் பிடித்துக் கொண்டான் மகேஷ். மாமியார் தந்த காபியை உறிஞ்சிய வண்ணம் மாமனாரின் வண்ணபடத்தின் அடியில் எதையோ பதிவிட்டுக் கொண்டிருந்தான்.

அரைமணி நேரத்தில் கங்காரப்பாவிற்கு அந்த அழைப்பு வந்தது. “மாமா! உங்க நண்பர் குமாரப்பா பேசறார்… பயப்படாமே பேசுங்க” என்று மாமனாரிடம் அவருடைய போனை மகேஷ் கொடுத்தான்.

“கங்காரப்பா… நான்தான் குமாரப்பா பேசறேன். ரொம்ப ஸாரி! காலையிலே ஃபேஸ்புக்லே உன் போட்டோவை போட்டு உன்னை இன்சல்ட் பண்ற மாதிரி கமெண்ட் பண்ணிட்டேன். நீ ‘அப்செட்’ ஆயிருப்பே. அதுக்கு ரொம்பவும் வருத்தப்படறேன்… ஆனா நீ அந்த நரகாசுரனைப் பத்தி ஒரு வித்யாசமான நல்ல தகவலை நாலு பேரு தெரிஞ்சுக்கிற மாதிரி கவுண்டர் பதிவு பண்ணியிருக்கே ரொம்ப சூப்பரா இருந்தது. அதனாலதான் போன் பண்றேன். எப்பவும் மீடியாவை வெறும் கேலிகூத்து விஷயத்துக்கு யூஸ் பண்ணாம, இப்படி நல்ல தகவலாய் தரும்போது அது பலருக்கு உபயோகமா இருக்கும்” என்று உண்மையிலே வெட்கப்படுவனாய் குமாரப்பா பேசிய போது கங்காரப்பாவிற்கு வியப்பாகி போனது. ஆவலுடன் மாப்பிள்ளையை அதைப்பற்றி கேட்டார். உற்சாகமாக மகேஷ் கங்காரப்பாவின் முகநூலில் பதிந்திருந்த அந்த தகவலை காட்டினான். “நரகாசுரனுக்கு நன்றி சொல்வோம்” என்ற தலைப்பிட்டு தமிழிலும் கன்னடத்திலும் மகேஷ் அந்த தகவலை பதிவிட்டிருந்தான்.

காஞ்சி மகாபெரியவாளின் அருள்வாக்கு இது. பகீரதன் தன் முன்னோர்களின் நற்கதிக்காக கடுமையான தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார். அந்த கங்கை பல ஆயிரம் மைல்கள் ஓடி அங்குள்ள ஜனங்களுக்கெல்லாம் பயனளிக்கிறது. பகீரதன் இப்படி கங்கை மக்களுக்கு பயனளிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு கொண்டு வரவில்லை. முன்னோர்களின் நற்கதியை

குறிக்கோளாக கொண்டு பகீரத முயற்சி செய்து கொண்டு வரப்பட்ட கங்கை ஜனங்களுக்கு பயன்படுமாறு inஉனைநவேயட ஆகத்தான் அமைந்துள்ளது. iவேநவேiடியேட ஆக பகீரதன் அதை செய்யவில்லை.

ஆனால் நரகாசுரனோ கிருஷ்ண பகவானோட சுதர்சன சக்கரத்தால் கழுத்தறுப்பட்டு உயிர் போகும் நிலையில் கூட தனக்கென ஒரு வரத்தையும் கேட்காமல் அந்த நாள் இனிமேல் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்பட வேண்டுமென்றும் அன்று அதிகாலையில் எல்லோரது இல்லத்தின் எந்த நீரும் கங்கையாக புனிதமடைந்து அனைவரது பாவங்களை போக்க வேண்டுமென்றும் வரம் கேட்டான். இது iவேநவேiடியேட ஆக நரகாசுரனால் நமக்காக கேட்கப்பட்ட வரம்.

அதனால் வேறு ஏதோ நோக்கத்தோடு கங்கையைப் பாய வைச்ச பகீரதனைவிட நமக்கென்றே வரம் கேட்டு கங்கையை வீட்டுக்கு வீடு தேடிட்டு ஓடி வரும்படி செஞ்ச நரகாசுரனுக்கே நாம் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம். அதனால் நரகாசுரனுக்கு நன்றி சொல்வோம்.

மாமனாரின் முகநூலில் மகேஷ் பதிவு செய்த இந்த தகவல் அதற்குள் ஆயிரம் லைக்குகளுடனும், ஐநூறு ‘சூப்பர்’ கமெண்டுகளுடன் சந்திராயன் வேகத்தில் கங்காரப்பாவின் மதிப்பை சந்திர மண்டலதுக்கே கொண்டு போய்விட்டது. போன் கால்களிலும் பாராட்டு குவிந்த வண்ணமிருந்தது. கங்காரப்பா குஷியாகி தீபாவளியை குதூகலமாக்கிக் கொண்டிருந்தார். கங்காரப்பாவிற்கு மருமகனை நினைத்து பெருமையாக இருந்தது.

“மாப்பிள்ளை ரொம்ப தேங்க்ஸ்! இப்படி ஒரு நல்ல மெஸேஜை என் போட்டோவோட போட்டு அசத்திட்டீங்க… உங்களுக்கு தீபாவளி பரிசா என்ன வேணுமோ கேளுங்க” என்று ஓவர் பூரிப்புடன் கேட்டார்.

மகேஷ் சற்று யோசித்துவிட்டு பேசினான்.

“மாமா புராண கதையிலே ஒரு அசுரன் உயிர் பிரியும் நேரத்தில்கூட புனித கங்கை இந்த தீபாவளியன்னிக்கு எல்லார் வீட்டுக்கும் வரணும்னு வரம் கேட்டதாக சொல்லப்படுது. இதுதான் நமெக்கெல்லாம் ஒரு நல்ல மெஸேஜ். எங்கோ ஓடற புனித கங்கை தீபாவளி அன்னிக்கு எல்லார் வீட்டிலும் பாய்ந்து நம்ப பாவத்தை எல்லாம் போக்குது என்பது நம்ப நம்பிக்கை. ஆனா அந்த அசுரனுக்கு இருந்த பெரிய மனசு இப்போ இங்கே நமக்கு இல்லாம போச்சு. இயற்கையாக ஓடற நதியையே ‘எனக்குதான் வேண்டும்’ன்னு தடுத்து அணைகளை கட்டிக்கிறோம். அதை கடைக்கோடிவரை பாயவிடாம பண்ணிடறோம்.

நியாயப்படி கொடுக்க வேண்டிய தண்ணீரையும் கொடுக்கவிடாம போராட்டம் பண்றோம். அந்தந்த காலத்துக்குப் போய் சேராத தண்ணீராலே டெல்டா பகுதியிலே கருகி போயிருக்கிற நெற்பயிரை எல்லாம் குலதெய்வம் கோயிலுக்கு போகும்போது நானும் நித்யாவும் பார்த்தோம். என் செல்போன்லே எடுத்த போட்டோவை காட்றேன் பாருங்க.

நாங்க அங்கே காய்ந்துபோன கதிர்களை போட்டோ எடுத்துட்டிருந்போதுதான் நீங்க நித்யாவுக்கு போன் பண்ணி இங்கே பெரிய ஆர்பாட்டத்திலே கலந்துகிட்டு இருக்கிறதா பெருமையா சொன்னீங்க. எங்க ரெண்டு பேரு மனசும் வலிச்சுது.

இன்னிக்கு கூட குளிக்கும்போது அந்த பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர்லே நாம குளிக்கிறோமோன்னு உறுத்தலாய்தான் இருந்தது. அதனாலே நீங்க இனிமே இதுமாதிரி போராட்டங்களிலே கலந்து கொள்ள போறதில்லைன்னு உறுதி அளிச்சா அதுவே நீங்க எனக்கு தரும் தீபாவளி பரிசா இருக்கும்.” மகேஷ் உருக்கமாக பேசியது கங்காரப்பாவை நிச்சயம் சிந்திக்க வைக்கும் என்று நம்புவோமாக.

கூடை

மொத்தம்

₹0